Saturday, October 2, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/03/large/722375.jpgபிளாஸ்டிக் பைகளுக்கு தடை உள்ள நிலையில் 75 மைக்ரானுக்கு குறைவான பைகளுக்கு தடை விதிக்க திட்டம்: அரசின் முடிவால் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் குழப்பம்

பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஒருசில மாநிலங்கள் ஒரு படி மேலே சென்று, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளன. தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் (தடிமன் வரைமுறையின்றி) மீதான தடை, 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலில் உள்ளது.

இதனிடையே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், திருத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகளை (2021) வெளியிட்டுள்ளது. அதில், 75 மைக்ரான் தடிமனுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் பைகள், ஒரு சதுர மீட்டர் அளவில் 60 கிராம் (GSM) வரை உள்ள நெய்யப்படாத பிளாஸ்டிக் பைகளை செப்.30-ம் தேதி முதல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும், 100 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு 2022-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...