Tuesday, October 19, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/20/large/728458.jpgபட்டா பிரச்சினைக்கு தீர்வு காண கிராம அளவில் சிறப்பு முகாம்கள் நடத்த வழிகாட்டுதல் வெளியீடு

விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில்,கிராம அளவில் சிறப்பு முகாம்கள்நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

வருவாய் துறை அமைச்சர்சாத்தூர் ராமச்சந்திரன், கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பில்,‘‘அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும் இந்த அரசின்கொள்கையின் ஓர் அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு 2022-ம் ஆண்டு பொங்கலுக்குள் அனைத்து கிராம மக்களும் பயன்பெற வழிவகை செய்யப்படும்’’ என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...