
தமிழக காவல்துறையில் 2-ம் நிலை காவலர் பணியில் சேர்ந்து 10 ஆண்டுகளில் முதல்நிலைக் காவலராகவும், அடுத்த 5 ஆண்டுகளில் தலைமைக் காவலராகவும், அதன்பின் 10 ஆண்டுகளில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகவும் பதவி உயர்வு பெறுகின்றனர்.
இவர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் 6 மாதம் போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி அளி த்து, எஸ்ஐயாக பணிபுரிய அனு மதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் சிலர் பயிற்சி முடிப் பதற்குள்ளேயே பணி ஓய்வு பெறுகின்றனர். பயிற்சிக்குப் பிறகு பலர், பதவி உயர்வு இன்றி சிறப்பு எஸ்ஐகளாகவே ஓய்வு பெறுகின்றனர்.எஸ்ஐ-யில் இருந்து ஆய்வாளர் பதவி உயர்வுக்கு 10 ஆண்டு காலம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், 35 ஆண்டுகளுக்குமேல் பணிபு ரிந்து 55 வயதைக் கடந்த சிற ப்பு எஸ்ஐகளுக்கு, சிறப்பு காவல் ஆய்வாளர் (ஸ்பெஷல்) அல்லது ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரு கின்றனர். அதற்கான சூழல் உருவாகியுள்ளதாக அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்