
அண்ணா பிறந்த நாளையொட்டி விடுதலை செய்யப்படவுள்ள சிறைவாசிகளில், வெடிகுண்டு வழக்கு, தேச துரோக வழக்கு, கொடுங்குற்றங்கள் ஆகியவற்றில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய முடியாது என சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
திருச்சி மத்திய சிறையை நேற்று ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிறைவாசிகளின் பாதுகாப்பில் திமுக அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. சிறைக் காவலர்களுக்கு கூடுதல் பணி நேர படியை உயர்த்தித் தருவது குறித்து முதல்வரிடம் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்