Saturday, October 9, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/10/large/724952.jpgஇன்று உலக மனநல நாள்: தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபடுவது எப்படி?- மனநல மருத்துவர் விளக்கம்

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 10-ம் தேதி உலக மனநல நாளாக கடைப் பிடிக்கப்படுகிறது. வயது வித்தியாசம், வசதி வாய்ப்புகள் என எதையும் பாராமல் பலரையும் ஆட்கொள்கிறது மன அழுத்தம். நாளாக நாளாக எண்ணங்களின் குவியல் அழுத்தமாக மாறி, சில நேரங்களில் தற்கொலை வரை கொண்டுபோய் நிறுத்துகிறது. கரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள், தொழில் பாதிப்பு, வேலையிழப்பு ஆகியவை மக்களிடையே மனநல பாதிப்புகளை உருவாக்கி யுள்ளன.

மனநல பாதிப்பு, தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபடுவது குறித்து கோவையைச் சேர்ந்த மூத்தமன நல மருத்துவர் என்.எஸ்.மோனி கூறியதாவது: இழப்பு, தோல்வி, வெறுப்பு, அவமானம், ஏமாற்றம், குற்ற உணர்வு, தன்மீது நம்பிக்கை யின்மை போன்றவை தற்கொலை எண்ணத்துக்கு காரணமாகின்றன. பக்குவப்படாத மனநிலையில் உள்ளவர்கள், உணர்ச்சிவயப்பட்டு முடிவு எடுப்பவர்கள், ஏமாற்றம் வந்தால் தாங்கிக்கொண்டு எதிர்நீச்சல் போடத் தெரியாதவர்கள் தற் கொலைக்கு தூண்டப்படுகின்றனர். மன வருத்தம், மனச்சிதைவு, போதைப்பழக்கம் மற்றும் பொருளாதார காரணங்களும் எண்ண மாற்றத்துக்கு வித்திடுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...