Saturday, November 13, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/14/large/737108.jpgகிராமப்புற இளைஞர்களுக்காக தொகுதிவாரியாக ரூ.3 கோடி செலவில் மினி விளையாட்டு அரங்கம்: முதற்கட்டமாக நிலம் கண்டறியும் பணிகள் தொடக்கம்

தமிழக அரசு கிராமப்புற இளைஞர்களிடையே விளையாட்டை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், கிராமப் பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள, நீண்ட தூரம் பயணித்து அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள விளையாட்டு அரங்கை தேடிச் செல்லும் நிலை உள்ளது.

எனவே, கிராமப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக மினிவிளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என தமிழக அரசின் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, தொகுதிவாரியாக தலா ரூ.3 கோடி செலவில் மினி விளையாட்டு அரங்கம் அமைப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே விளையாட்டு அரங்கம் உள்ள தொகுதிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...