Wednesday, November 17, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/11/18/large/738414.jpgஐசிஏஆர் தேர்வில் தேசிய அளவில் 2-ம் இடம்: திண்டுக்கல் மாணவி ஓவியா சாதனை

ஐ.சி.ஏ.ஆர். தேர்வில் திண்டுக்கல்லைச் சேர்ந்த அ.ஓவியா தேசிய அளவில் 2-ம் இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் (ஐசிஏஆர்) ஆண்டுதோறும் பி.வி.எஸ்சி. (கால்நடை மருத்துவர்) படிப்பு முடித்தவர்கள் மேற்படிப்பான எம்.வி.எஸ்சி.யில் சேர தேசிய அளவில் தேர்வு நடத்துகிறது. இத்தேர்வு செப்.17-ல் நடந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த அ.ஓவியா, தேசிய அளவில் 2-ம் இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்தார். இவர், திருநெல்வேலியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பி.வி.எஸ்சி. படித்தவர் ஆவார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...