
பாதாளச் சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் போன்றமனிதக் கழிவுகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் எனக்கோரி சபாய் கர்மாச்சாரி அந்தோலன் என்ற அமைப்பின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப் பட்டிருந்தன.
இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் நடந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, தமிழகத்தில் எந்தமாநகராட்சியிலும் பாதாளச் சாக்கடை உள்ளிட்ட மனிதக்கழிவுகளை அகற்ற மனிதர்கள் ஈடுபடுத்தப்படவில்லை, என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்