
சென்னை வேளச்சேரி ஏரி வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் ஏரியில் கழிவுநீரை சேர்ப்பதைத் தடுக்க பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ள உள்ள செயல் திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
வேளச்சேரி ஏரி வரத்து கால்வாய் பகுதிகளில் புதிதாக உயரமான கட்டிடங்கள் கட்டப்படுவதால், ஏரிக்கு ஆபத்து ஏற்படும் என்றும், வேளச்சேரி ஏரி மற்றும் வீராங்கால் ஓடையில் கழிவுநீரை சேர்ப்பதால் ஏரி மாசுபடுவதாகவும் கடந்த ஆண்டு நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின. அவற்றின் அடிப்படையில் இரு வழக்குகளை பதிவு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், வேளச்சேரி ஏரி, அதன் வரத்து கால்வாயில் உள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய கூட்டுக் குழுவும் அமைக்க உத்தரவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்