Friday, December 24, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/25/large/750739.jpg48-வது நினைவு தினத்தில் பெரியார் சிலைக்கு முதல்வர், தலைவர்கள் மரியாதை

சென்னை: பெரியாரின் 48-வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவச் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின்மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரியாரின் 48-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு கீழே அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞர் அணி செயலாளர் உதயநிதிஸ்டாலின், செய்தித் தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...