
சென்னை: மாணவர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் விதமாக, ‘இந்துதமிழ் திசை’ நாளிதழ் பல்வேறுசெயல்பாடுகளை இணையவழியாகத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன்படி, ஏபிஜே அகாடமி உடன் இணைந்து ‘கையெழுத்துப் பயிற்சி’ எனும் ஆன்லைன் நிகழ்ச்சியை ஜன.24 முதல் பிப்.1-ம்தேதி வரை (ஜன-30 - ஞாயிறுதவிர்த்து) மாலை 6.30 மணி முதல்7.30 மணி வரை நடத்த உள்ளது.
இந்தக் கையெழுத்துப் பயிற்சியை கடந்த 7 ஆண்டுகளாகமாணவர்களின் திறன் மேம்பாட்டுக்காக பல பயிற்சிகளை வழங்கிவரும் ஏபிஜே அகாடமியின் நிறுவனரும், புகழ்பெற்ற கையெழுத்துப் பயிற்சியாளருமான தேவகிபாலாஜி வழங்க உள்ளார். இப்பயிற்சியில் 7 வயது குழந்தைகள் முதல் அனைவரும் பங்கேற்கலாம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்