
சென்னை: உலக சுகாதார தினத்தை முன்னிட்டு ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘நமது பூமி நமது சுகாதாரம்’ எனும் ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வுநாளை (ஏப்.10) மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
கரோனா போன்ற பெருந்தொற்று பரவல் காலங்களில் மக்களிடம் சுகாதார விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு சுகாதாரம் தொடர்பான நிகழ்வுகளை ஆன்லைனில் முன்னெடுத்து நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, உலக சுகாதார தினத்தையொட்டி (ஏப்.7) ‘நமது பூமி நமது சுகாதாரம்' எனும் ஆன்லைன் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு நாளை (ஏப்.10) மதியம் 12 மணிக்கு நடை பெறவுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்