Wednesday, April 13, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/04/14/large/788041.jpgசிவசங்கர் பாபாவுக்கு மீண்டும் சிறை: செங்கை போக்சோ நீதிமன்றம் உத்தரவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் தனியார் உண்டு உறைவிடப் பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் காஞ்சிபுரம் சிபிசிஐடி போலீஸார் 6 வழக்குகளும், சென்னை சிபிசிஐடி போலீஸார் 2 வழக்குகளும் பதிவு செய்துள்ளனர். இதில் 6 வழக்குகளுக்கான விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்திலும், 2 வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகின்றன. மேற்கண்ட வழக்குகளில் 4-ல் பாபா ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் சிவசங்கர் பாபா நேற்று செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 27-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சிவசங்கர் பாபாவை போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...