Tuesday, July 19, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/20/large/828944.jpgசின்னசேலம் மாணவி உயிரிழப்பு விவகாரம் | உடல் மறு பிரேதப் பரிசோதனை நிறைவு - பள்ளியில் சிபிசிஐடி ஆய்வு

சென்னை/கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மாணவி உயிரிழப்பைத் தொடர்ந்து, வன்முறைக் கும்பலால் உருக்குலைந்து போன தனியார் பள்ளியில், சிபிசிஐடி குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மாணவியின் உடல் நேற்று மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 16 வயதான பிளஸ்-2 மாணவி, பள்ளி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உடலை வாங்க பெற்றோர் மறுத்தனர். இந்நிலையில், கடந்த 17-ம் தேதி பள்ளி முன் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்தக் கலவரத்தில் பள்ளிக் கட்டிடம் சேதமடைந்ததுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், காவல் துறை வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. கல்வீச்சில் டிஐஜி உள்ளிட்ட காவல் துறையினர் காயமடைந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...