Monday, July 11, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/07/12/large/825296.jpgசுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் 265-வது குருபூஜை - தமிழக அரசு சார்பில் மரியாதை

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் 265-வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு, தமிழக அரசுசார்பில் அமைச்சர்கள், அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் குருபூஜை விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இ.பரந்தாமன், ஏ.எம்.வி.பிரபாகரன், துணை மேயர் மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள்தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...