
சென்னை: தொடக்கக் கல்வித் துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் 29-ம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல், பதவிஉயர்வு, பணிநிரவல் கலந்தாய்வுசார்பான கொள்கைகள் கடந்த ஆண்டு வகுக்கப்பட்டன. அவற்றை பின்பற்றி 2021-22 கல்வி ஆண்டில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வுகள் ‘எமிஸ்' வலைதளம் மூலம் நடத்தி முடிக்கப்பட்டன. தொடர்ந்து அலகு விட்டு அலகு மாறுதலுக்கான கலந்தாய்வு நடக்க உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்