Saturday, September 17, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/17/large/868908.jpgபுதுச்சேரியில் பட்டதாரிகள் தொழில் தொடங்க முன்வர வேண்டும் - முதல்வர் ரங்கசாமி விருப்பம்

புதுச்சேரி: புதுச்சேரி தொழிற்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா கம்பன் கலையரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு 14 அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த இந்தாண்டு பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது ‘‘பட்டம் வாங்குவது என்பது படித்த படிப்புக்கான பெரிய அங்கீகாரம், மரியாதை. தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்து பயிற்சி பெற்று பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு பணிக்கு செல்வது மிக முக்கியமானது. இப்போது நமக்கு நிறைய தேவை இருக்கிறது.

தொழிற்சாலைகள், நிறுவனங்களில் நன்கு படித்தவர்கள், கைவினைஞர்கள், தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் பணிக்கு செல்வது என்பது மிகுந்த அவசியமான ஒன்று. வேலை கிடைக்க நிறைய தொழிற்சாலைகளை உருவாக்குவதும், புதிய தொழிற்சாலகளை கொண்டு வருவதும் அரசின் கடமை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...