Wednesday, November 2, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/03/large/891484.jpgதிருப்புகழ் குழு பரிந்துரைத்தபடி பணி முடிந்த இடங்களில் பாதிப்பில்லை; 3 சுரங்கப் பாலங்களில் தண்ணீர் தேக்கம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மைக்கான அறிவுரைக் குழுவின் பரிந்துரைப்படி மழைநீர் வடிகால் கட்டப்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. 3 சுரங்கப் பாலங்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெறுகிறது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த அக்.31-ம் தேதி மிகக் கனமழை பெய்திருந்த நிலையில், நவ.1-ம் தேதியும் மிகக் கனமழை நீடித்தது. இந்நிலையில் சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் மழைநீர்தேங்கிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் தொடர்பாக, மாநகராட்சியின் 15மண்டலங்களிலும் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள், மண்டலஅதிகாரிகள், மண்டல பொறியாளர்கள் ஆகியோருடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ் தாஸ் மீனா, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், பருவமழைபாதிப்பு தடுப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...