
சென்னை: மைசூருவில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட 28 ஆயிரம்தமிழ் கல்வெட்டுகளை பாதுகாக்கும் வகையில் சென்னை மண்டலத்தில் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என மத்திய கலாச்சார அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மைசூருவில் உள்ள தொல்லியல் துறையின் கல்வெட்டு பிரிவில் பாதுகாக்கப்பட்ட 28 ஆயிரம்தமிழ் கல்வெட்டுகள், 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னைஉயர் நீதிமன்ற உத்தரவின் பேரில்சென்னை மண்டல அலுவலகத்துக்கு மாற்றப்பட்டன. இவற்றைபாதுகாக்கும் வசதி சென்னை மண்டல அலுவலகத்தில் இல்லை. இந்த முக்கியமான கல்வெட்டுகள் வெப்பநிலை மற்றும் பாதகமான வானிலை காரணமாக உடைந்து போகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்