Thursday, January 5, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/06/large/925332.jpg2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: ஆசிய வளர்ச்சி வங்கி ரூ.2,900 கோடி கடனுதவி

சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. உயர்மட்டப்பாதை, சுரங்கப்பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் சென்னையில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப்பணிகள் 2026-ம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இத்திட்டத்தின் விரிவாக்கத்துக்கு சுமார் ரூ.2 ஆயிரத்து 900 கோடி கடனுதவி வழங்க ஆசிய மேம்பாட்டு வங்கி முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசும் வங்கி அதிகாரிகளும் அண்மையில் கையெழுத்திட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...