
சென்னை: தமிழகத்தில் விவசாயத்துக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் வழங்கப்படும் நேரம் குறித்து மின்வாரியம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் குரூப்-1, குரூப்-2 என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது. இதன்படி, குரூப் 1, குரூப் 2 பிரிவில் இரண்டு பகுதிகளுக்கும் காலை நேரத்தில் 8.30 மணியில் இருந்து பிற்பகல் 2.30 மணி வரை 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்