Monday, March 6, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/06/large/956261.jpgவிளையாட்டு வீரர், வீராங்கனைகள் வெளியில் வரவேண்டும் - மதுரையில் அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் பேச்சு

மதுரை: மதுரை லேடி டோக் கல்லூரி மாணவி ஜெர்லின் அனிகா மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் விளையாடி தங்கம் உள்ளிட்ட 3 பதக்கம் வென்றார். இவருக்கு மத்திய அரசு அர்ஜுனா விருது வழங்கி கவுரவித்தது. ஜெர்லின் அனிகா மற்றும் உலக அளவில் விளையாடுப் போட்டியில் சாதித்த இக்கல்லூரி மாணவிகளுக்கான பாராட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.

தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது: "அனைவரும் பொறாமைப்படும் அளவிற்கு எனக்கு வரவேற்பு கொடுத்துள்ளீர்கள். எனக்கான வரவேற்பாக இதை பார்க்கவில்லை. விளையாட்டுப் போட்டியில் சாதனை புரிந்த வீராங்கனைகளுக்கென அளித்த வரவேற்பாகவே பார்க்கிறேன். விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து, எங்கு விளையாட்டு போட்டி நடந்தாலும், சிறப்பு விருந்தினராக பங்கேற்று வீரர்களை உற்சாகப்படுத்துகிறேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...