
சென்னை: தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் துணைத் தலைவர் ஏ.ஜி.மவுரியா நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநில அரசு அனுப்பும் தீர்மானங்கள் நிலுவையில் இருக்கிறதென்றால், அவற்றுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று அர்த்தம் என ஆளுநர் பேசியிருப்பதை, சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மத்திய அரசு, தனது பிரதிநிதி மூலமாக மாநில அரசின் இறையாண்மைக்கு அறைகூவல் விடுப்பதாகவே மநீம இதைப் பார்க்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்