Sunday, May 21, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/22/large/993871.jpgபணியாளர் தேர்வாணையத்தின் திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணை வெளியீடு

சென்னை: 2023-24-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணையை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள், துணை அலுவலகங்களுக்கான குருப்-சி, குருப்-டி பணியிடங்கள் எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்காக தேசிய அளவில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

ஓராண்டில் என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும், அவற்றுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை எஸ்எஸ்சி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2023-24-ம் ஆண்டுக்கான அட்டவணையை ஏற்கெனவே வெளியிட்டிருந்தது. இந்நிலையில், திருத்தப்பட்ட தேர்வுகால அட்டவணையை எஸ்எஸ்சி இணையதளத்தில் (www.ssc.nic.in) வெளியிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...