Tuesday, July 11, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/11/large/1046524.jpgடாஸ்மாக் கடைகளை 7 மணிக்கு திறந்தால் புரட்சி வெடிக்கும் - புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை

மதுரை: புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எழுதிய, ‘குடியின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்ப்போம், மது இல்லா புதிய தமிழகம் படைப்போம்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடந்தது. அப்புத்தகத்தை அவரே நேற்று வெளியிட விழாவில் அக்கட்சி மாநகர வழக்கறிஞர் பிரிவு செயலர் தாமோதரன், புறநகர் மாவட்ட செயலர் பாலா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதன்பின், க்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் 1971-ம் ஆண்டு வரை பூரண மதுவிலக்கு அமலில் இருந்தது. இதன்பின், முன்னாள் முதல்வர் கருணாநிதி மதுக்கடைகளை அறிமுகம் செய்தார். தற்போது, தமிழ்நாடு அரசே மது விற்பனையை செய்கிறது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தமிழக மக்கள் போராடுகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தும் செய்யவில்லை. இளைஞர்கள் அதிக அளவில் மது பழக்கத்துக்கு அடிமையாகுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...