
மதுரை: மதுரையில் கலைஞர் நூலகத்தை முதல்வர் ஜூலை 15ம் தேதி திறந்து வைக்கிறார். இதையொட்டி, பந்தல் அமைத்தல், பாதுகாப்பு, விழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை - நத்தம் ரோட்டில் ரூ.120.75 கோடியில் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஜூலை 15-ல் நடக்கிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைக்கிறார். அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் அதிகளவில் பங்கேற்கும் விதமாக விழா ஏற்பாடு தீவிரமாக நடக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்