Wednesday, July 5, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/05/large/1036954.jpgசரல மழகக தககப படககத ரஜபளயம சலகள - கறறல சசன தடஙகய நலயல வகன ஓடடகள சரமம

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் சாரல் மழைக்கே தாக்குப் பிடிக்காமல் சாலைகளில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது. குற்றால சீசன் தொடங்கிய நிலையில் மழைநீர் நிறைந்த சாலைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியதை அடுத்து தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற கோடை வாசஸ்தலங்களில் ஒன்றான குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு சென்று வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...