
சென்னை: அமமுக பொதுச்செயலர் டிடிவி. தினகரனை திவாலானவர் என அறிவிக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தினகரன் தரப்பு மூத்த வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்ததால், ரூ.31 கோடி அபராதத்தை வசூலிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சைதாப்பேட்டையைச் சேர்ந்த எஸ்.பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அமமுக பொதுச்செயலரான டிடிவி. தினகரன், அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாகக்கூறி அவருக்குரூ. 31 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை கடந்த 1998-ம் ஆண்டு பிப். 6-ம் தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவை எதிர்த்து அந்நிய செலாவணி ஒழுங்குமுறை மேல்முறையீட்டு வாரியத்தில் டிடிவி. தினகரன் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்