Wednesday, August 16, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/08/16/large/1095703.jpgமாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் சுதந்திர தினத்தையொட்டி விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு தேநீர் விருந்து அளிக்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் இன்று மாலை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வல்லவன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு சிறுதானிய இனிப்பு உருண்டையை தியாகிகளுக்கு வழங்கி கவுரவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: விடுதலை போராட்ட வீரர்கள் பல்வேறு துன்பங்களை எல்லாம் அடைந்து, தங்களது உயிரை துச்சமென எண்ணி பாடுபட்டு வாங்கி கொடுத்த சுதந்திரத்தை நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நம்முடைய நாடு பெரிய வளர்ச்சி அடைய வேண்டும் என்ற அவர்களின் எண்ணத்துக்கு ஏற்ப, இப்போது நாம் பெரிய வளர்ச்சியை நாட்டில் கண்டுகொண்டிருக்கின்றோம். அந்த வளர்ச்சியின் மூலம் உலகில் தலைசிறந்த நாடாக விளங்குகின்ற நிலையில் நாம் வந்துகொண்டிருக்கின்றோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...