
சென்னை: காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சில திருத்தங்களோடு தீர்ப்பு வழங்கிய பின்னர், இரு மாநிலங்களிடையே பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை என்று மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகருக்கு, அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கர்நாடக அரசு கடந்த 2 மாதமாக தமிழகத்துக்கு உரிய நீரை வழங்கவில்லை. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, மத்திய நீர்வளத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார். மேலும், மத்திய நீர்வளத் துறை அமைச்சரை நான் இருமுறை நேரில் சந்தித்து, நிலைமைகளை விளக்கியுள்ளேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்