Tuesday, September 5, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/09/05/large/1118423.jpgமதுரை | இயற்கை முறை விவசாயம் அறிய களப்பயணம் சென்ற தொடக்கப்பள்ளி மாணவர்கள்

மதுரை: மதுரை அம்மாபட்டி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் இன்று இயற்கை முறை விவசாயம் பற்றி அறிந்துகொள்ள உலகநேரியிலுள்ள இயற்கை விவசாயத் தோட்டத்திற்கு களப்பயணம் சென்றனர்.

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபட்டி அரசு தொடக்கப்பள்ளியைச் சேர்ந்த 21 மாணவர்கள் தலைமையாசிரியர் ச.மங்களேஸ்வரி, ஆசிரியை பி.சண்முகப்பிரியா ஆகியோருடன் அருகிலுள்ள உலகநேரி கிராமத்திலுள்ள இயற்கை விவசாயம் தோட்டத்திற்கு இன்று களப்பயணம் சென்றனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பின்புறமுள்ள உலகநேரியில் 8 ஏக்கர் பரப்பில் 5 நண்பர்கள் இணைந்து மலிவு விலையில் நஞ்சில்லா காய்கறிகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...