
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பதிவாகி உள்ள நிலையில் இன்று (டிச.5, செவ்வாய்க்கிழமை) சென்னை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போல எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் 25 தொலைதூர ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
புறநகர் ரயில் சேவையை பொறுத்தவரையில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் 25 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வந்தே பாரத், சதாப்தி மற்றும் பல்வேறு விரைவு ரயில்கள் இந்த பட்டியலில் அடங்கும். அதே நேரத்தில் சென்னை மெட்ரோ ரயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இன்று (டிச.5) வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்